பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

எம்பெருமானின் விசித்திரமான உலக ள விய அனைத்தளாவிய தோற்றத்தைக் கண்டு வியந்து வியந் . ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார் : "மாயா, வாமன னே,மது சூதா ! நீயருளாய்

தீயாப் நீராய் நிலனாயப் விசும்பாய்க் காலாயப் தாயாப்த் தந்தையாயப் மக்களாய் மற்றுமாய் முற்றுமாயப் நீயாய் நீநின்ற வாறுஇவை யென்ன நியாயங்களே !” "அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னேஅருளாய்

திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராய்இருளாய் பொங்கு பொழிமழை யாப்ப்புக ழாய்ப்பழி யாய்ப்பின்னும்: வெங்கண்வெங் கூற்றமு மாய்இவை என்னவிசித்திரமே!" என்னும் அற்புதமான பாசுரங்களை நம்மாழ்வார் பெரு வ பாடியுள்ளதைப் பார்க்கிறோம்.

ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தின் மூலம் திரும . வழிபாட்டிலும் வழிபாட்டு முறைகளிலும், மக்க வ குழுக்களாகவும், கூட்டமாகவும், பெருந்திரளாகவும் க | நின்று பெருமாள் சேவையில் ஈடுபட்டிருக்கிறார் . என்பதைக் காண்கிறோம்.

ஆழ்வார்கள் தங்கள் இனிய இசையுடன் க பாசுரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து அவர்களைத் திரட் | யிருக்கிறார்கள். அக்காலத்தில் இருந்த ஆட்சிக் கொடுமைகள் அசுரக் கொடுமைகள், சமுதாயக் கொடுமைகளுக்க, எதிராகத் தங்கள் பாசுரங்களில் குரல் கொடுத்து அதி. மக்கள் திரண்டிருக்கிறார்கள்.

இன்றுங் கூடத் திருமால் கோவில்களின் திருவிழாக்களில் தேரோட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவதைக் காண்கிறோம். மதுரையில் அழகப் ஆற்றில் இறங்கும்போது பல லட்சம் மக்கள், குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராக, கூட்டம் கூட்டமாக, தலையில் கட்டுச்சோற்றுடன் திரண்டு குவிந்து, ஆற்றில் இறங்கி அழகரைச் சேவித்து, சாதி மதம் இன மொழி பால் வேறுபாடுகளை மறந்து, வைகை யாற்றுமனலில் அமர்ந்து. கட்டுச் சோறுகளை அவிழ்த்து, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இன் n