பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இன்னும் பாரத தேசம் முழுவதிலும், உலக முழுவதிலும் அதன் செய்திகள் பரவ வேண்டியதும் அவசியமாகும். அத்துடன் அக்காப்பியத்தின் பல வேறு சிறப்புகளைப்பற்றி மேலும் பல ஆய்வுகளும் ஆய்வுரைகளும் விரிவுரைகளும் வரவேண்டியது அவசியமாகும். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தமிழகத்தின் வரலாற்றுத் தன்மையும் தமிழ்நாட்டுச் சிறப்புகளும் தமிழ்நாட்டு நகரங்களின் சிறப்புகளும் மற்றும் நாகரிக வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி முதலியனவும் நேரிடையாக அமைந்திருப்பதையும் காண்கிறோம்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் மூன்று காண்டங்களும் புகார், மதுரை, வஞ்சி ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று நகரங்களும் முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளின் தலை நகரங்களாகும். அந்நகரங்களைப்பற்றிக் கூறப்பட்டிருக்கும் சிறப்புகளெல்லாம் தமிழகத்தின் சிறப்புகளாகும். சிலப்பதிகாரத்தின் முழு முதல் தமிழ்த்தன்மை குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளைப்பற்றியும் பார்ப்போம்.

புகார்க் காண்டத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரைப்பற்றிக் குறிப்பிடும்போது குடிபெயர்தல் இல்லாத சிறப்புடைய நகரம் என்றும், சான்றோர் மிகுதியாக அந்நகரில் இருத்தலால் அது நிலைபேறுள்ள நகரமாக இருந்தது என்றும், நீண்ட நெடிய சுவர்க்கம் போலவும், நாகர் உலகம் போலவும், போகமும் புகழும் மிக்க நகரமாகவும் விளங்கியது என்றும் இளங்கோவடிகளார் கூறுகிறார்.

"பதியெழு வறியாப் பழங்குடி மக்கள்" என்றும், "ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே என்றும், "நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு, போக நீள் புகழ் மன்னும் புகார் நகர்” என்றும் காப்பியம் குறிப்பிடுகிறது.

புகார் நகரில் செழிப்பும் தொழில்வளமும் கலை இலக்கியப் பண்பாட்டுவளமும் வாழ்க்கைவளமும் நிரம்பியிருத்தலால், அங்குள்ள மக்கள் வேறு எங்கும்