பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

புகார் நகரத்துப் பாடலாசிரியன், மாதவிக்கு ஆடல் பாடல் கற்றுக்கொடுத்த பாடலாசிரியன், தமிழகம் நன்கு அறியும்படி பாடல்களை எடுத்துக்கூறும் திறனும், தமிழ் முழுதுமாக அறிந்த தன்மையும் கொண்டவன்; நாட்டிய நன்னூல் நன்கு அறிந்தவன். இசையாசிரியனுடைய திட்டத்தை உணர்ந்தவன் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

"இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்தாங்கு அசையா மரபின் அதுபட வைத்து மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும் ஆடல் பாடல் இசையே தமிழே" என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

முத்தமிழே இனிமையான ஆடல் பாடல் இசை யனைத்தும் என்னும் பொருளில் “ஆடல் பாடல் இசையே தமிழே” என்று அடிகளார் குறிப்பிடுவது சிறப்பாகும்.

எல்லா மொழிகளுக்கும் பொதுவான எண்ணையும் எழுத்தையும், தமிழ்மொழியில் அவற்றாலாகிய இயல் ஐந்தையும் இசைத்தமிழுக்குரிய நால்வகைப் பண்களின் பெருமையினையும், அப்பண்களோடு கூடிய பதினொரு வகைக் கூத்துகளையும் திறம்படக் காட்டி ஆடியும், தனது இனிய குரலால் பாடியும் பூம்புகார்ப் பொற்கொடியான மாதவி அனைவரும் போற்றிப் புகழும்படி செய்தாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள்.

"எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்

பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கின் வந்து."