பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இங்கு பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் ஒப்பிடப்படுகின்றன. அடிகளார் இந்தப் பாடல் அடிகளில் மிகவும் நுட்பமான பொருளைச் செருகியுள்ளார். பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் தமிழ்மணம் கலந்தவை. பொதிகைத் தென்றலில் இயற்கை மணம் அதிகம். மதுரைத் தென்றலில் இயற்கை மனத்துடன் செயற்கை மனமும் அதிகமாக உள்ளது. வைகை ஆறு, இறைவன் கோயில், பள்ளிகள், வாசனைத் திரவியங்கள் நிறைந்த அங்காடிகள், தமிழ்ச்சங்கம் முதலியன இணைந்த தென்றல் மதுரைத் தென்றலாகும். இங்கு தமிழின் பெருமை பன்முகத் தன்மை கொண்டதாக வெளிப்படுகிறது.

வைகைத் திருநதியின் சிறப்பை அடிகளார் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

"உலகுபுரந் துாட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்

புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி’ என்று கூறுகிறார்.

நமது நதிகளை ஜீவ நதிகளாக, புண்ணிய நதிகளாக, தெய்விக நதிகளாக நமது புலவர்களும், முனிவர்களும், நமது இலக்கியங்களும் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். பொன்னியை வற்றாத காவிரி என்றும், வான் பொய்க்கினும் தான் பொய்யாப் பொன் னி என்றும், வைகையை கரையெதிரே ஏடு ஏறிய வையையென்றும், சோமசுந்தரக் கடவுளே உருவாக்கிய தெய்விக வைகை என்றும், காவிரி தென்பெண்ணை பாலாறு, தமிழ்க் கண்டதோர் வையை பொருனை நதியென்றும் நமது தெய்வத் திருநதிகளைப் பாடி போற்றியிருக்கிறார்கள். ஆறுகளையும் நதிகளையும் வெறும் குடிநீர்ச்சாதனங்களாகவும், நீர்ப்பாசன சாதனங்களாகவும் மட்டும் நம் மக்கள் காணவில்லை. ஆறுகளைத் தெய்வங்களாக மதித்து நம் மக்கள் அவ்வாறுகளின் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கும் வைத்து மகிழ்ந்திருக் கிறார்கள். அத்துடன் வையையும் பொருனையையும் "தமிழ் கண்டதோர் வையை பொருனை' என்று பாரதி குறிப்பிடுவது சிறப்பாகும். இளங்கோவடிகள் பொதிகைத்