பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 235

தென்றலைக்காட்டிலும் சிறந்த மதுரைத் தென்றல் என்று குறிப்பிட்டு, பாண்டிய நாட்டின் பொய்யாக் குலக்கொடி வையை என்றும், புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

புறஞ்சேரியில் கவுந்தி அடிகளுடன் கண்ணகியைத் தங்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று மதுரை நகரின் சிறப்புகளைக் கண்டுவிட்டுத் திரும்பினான்.

இங்கு, மதுரை நகரின் அமைப்பு, அதன் கோட்டை, கோட்டை வாயில், நகரின் செழிப்பு, மக்களின் மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை நிலை, மாடங்கள், முற்றங்கள், செல்வரும் அரசரும் விரும்பும் வீதிகள், "செழுங்குடிச் செல்வரோடு வையம் காவலர் மகிழ்தரும் வீதி", "பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் (அறுபத்துநான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றோர்) வாழும் இருபெரு வீதிகள், அரசு விழை திருவின் அங்காடி வீதி, பகைதெறல் அறியாங் பயங்கெழு வீதி (நவரத்தின வீதி), இலங்குகொடி யெடுக்கும் நலம் கிளர் வீதி (பொன் கடை வீதி), நறுமடி செறிந்த அறுவை வீதி (துணிக்கடை வீதி), கூலம் குவித்த கூல வீதி, பால்வேறு தெரிந்த நால்வேறு வீதிகள், அந்திச் சதுக்கம், ஆவண வீதி முதலியவைகளைப்பற்றி விவரித்து, மதுரை நகரின் தென்தமிழ்நாட்டின் அழகிய தலைநகரின் சிறப்புகளைப்பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார்.

மதுரை நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய கோவலன் அதன் சிறப்புகளைப்பற்றிக் கவுந்தியடிகளிடம் கூறுகிறான்.

"நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி

கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு அறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதுர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து