பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி"

என்று காப்பியம் குறிப்பிடுகிறது.

"நிலம் தரும் திரு” என்பது மிக உயர்வான கருத்து; மிகுந்த, விரிவான, மிக விரிவான பொருள் நிறைந்த சொற்றொடராகும். இங்கு நிலம் என்பதில் மண், மலை, காடு, ஆறு, கடல், சுரங்கம் முதலியன அடங்கும். இவற்றுள் மண்ணில் விளையும் எண்ணற்ற விளைபொருள்கள், மலையில் கிடைக்கும் - இயற்கையில் கிடைக்கும் - பொருள்கள், காடுகளில் கிடைக்கும் மரம், காய்கனிகள் முதலியன, ஆறு கடல்களில் கிடைக்கும் மீன், உப்பு முதலியன, கரங்கங்களிலிருந்து கிடைக்கும் உலோகக் கனிகள் முதலிய எண்ணற்ற பொருள்கள் அடங்கும். இவையெல்லாம் மனித முயற்சியால், மனித உழைப்பால் பயன்படு பொருள்களாக ஆக்கப்படுகின்றன. இவைகளைத் தற்காலப் பொருளியல் இலக்கியத்தில் முதல்நிலை உற்பத்திப் பொருள் எனக் குறிப்பிடுகிறார்கள். இவைகளுள் பலவும் மறு உற்பத்திமூலம் நேரிடையான பயன்படுபொருளாக ஆக்கப்படுகின்றன. நெல்லும் இதர உணவுத்தானியங்களும் முதல்நிலையில் சாகுபடி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு அவை அரிசியாகவும் மாவாகவும் மறுஉற்பத்தியில் அல்லது இரண்டாம் நிலை உற்பத்தியில் நேரடிப் பயன்பாட்டுப் பொருளாக ஆக்கப்படுகின்றன. மலைகளிலும் காடுகளிலும் இயற்கையில் கிடைக்கும் கற்களும் மரங்களும் பல வேறு கட்டடப் பொருள்களாகவும் கலைப்பொருள்களாகவும் மறு உற்பத்தியில் மலர்ச்சி பெறுகின்றன.

இவ்வாறு பெருகும் செல்வம் அனைத்தும் - பொருள்கள் அனைத்தும் - மனிதனுக்கும், பூமியில் உள்ள இதர உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையான பொருள்களும் செல்வமும் நிலம் தரும் திருவும் அதன் மூலம் பெருகும் செல்வமுமாகும்.

இவ்வாறான, மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் இதர உயிரினமனைத்திற்கும் அவசியமான பொருள்களை