பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இங்கு தமிழகத்தின் தனிச்சிறப்புகளை அதன் நிலம் தரு திரு, செல்வச் செழிப்பு, பொருட்குவியல், நல்லாட்சி, அறவோர் நிறைந்த சமுதாயம், தீதில்லாத மக்கள் ஆகியவைகளை இளங்கோவடிகளார் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இமயத்தின் நெற்றியில் பாண்டிய மன்னன் தனது மீன் சின்னத்தை வெற்றியின் சின்னமாகப் பொறித்தான். அதன் பின்னர் சோழனும் சேரனும் முறையே தங்கள் புலி, வில் சின்னங்களை இமயத்தில் பொறித்தனர். அவர்களும் நாவலந்தீவிலுள்ள இதர அரசர்களும் தன் ஏவலின்படி நடக்க உலகம் முழுவதையும் ஆட்சி நடத்திய பாண்டிய மன்னன் என்று இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில் குறிப்பிடுகிறார்.

"கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந் தண்பொழில் மன்னர் ஏவல் கேட்பப் பார்.அர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன்” என்று காப்பிய அடிகள் கூறுகின்றன. இதில் தமிழகத்தின் சிறப்பையும் தமிழ் மன்னர்களின் சிறப்பையும் அடிகளார் பெருமைபடக் கூறுவதைக் காணலாம்.

மதுரைக்காண்டம் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் "கோவா மலையாரம் கோத்த கடலாரம்

தேவர்கோன் பூனாரம் தென்னவர்கோன் மார்பினவே” என்றும்,

“முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்

மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்" என்றும்,

"பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்' என்றும், மூவேந்தர்களைச் சிறப்பித்து உள்வரி வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது. இதை மிக அழகாக இளங்கோவடிகளார் குறிப்பிட்டுள்ளார்.