பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242. சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரைசுக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியனோ டொருபரிசா

நோக்கிக் கிடந்த

மதுரைக் காண்டம் முற்றிற்று” என்று இளங்கோவடிகளார் முடிக்கிறார்.

பாண்டியர், சேரர், சோழர் என்னும் முடியுடை மூவேந்தர்களுள் படைபலம் அதிகம் கொண்ட பாண்டியர் குலத்தில் பிறந்த அரசர்கள் அறமும் வீரமும் ஆற்றலும் மிக்கவர்கள். அவர்களுடைய பழமைச் சிறப்புமிக்க மதுரை மூதுார் அறப்பண்பு மேலிட்டது. திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும் கோவில் நகரமாக மதுரை மாநகரம் விளங்குகிறது. அந்நாட்டில் வாழும் மக்கள் குடிச்சிறப்பு மிக்கவர்கள். அந்த நாடு உணவுப்பொருள்களை மிகுதியாகக் கொண்டது. அந்நாட்டில் வையை ஆறு வளம் சுரக்கிறது. பாண்டியரின் செங்கோன்மை காரணமாக மாதம் மும்மாரி மழை பொழிகிறது. நீர்வளம் நிரம்பியிருக்கிறது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கலை உணர்வு நிரம்பி ஆடல் பாடல்களில் களிப்புடன் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளார்கள். இத்தகைய சிறப்புகள் மிக்க பாண்டிய மன்னன் - வடநாட்டு ஆரிய மன்னர்களை வென்று வாகை சூடிய அந்தப் பாண்டிய மன்னன் - நீதிக்காகத் தான் கோப்பெருந் தேவியுடன் உயிர் நீத்த பெருமையை மூன்று தமிழ் நாடுகளில் வாழ்வோரும் கான, மதுரைக் காண்டம் முற்றுப்பெறுகிறது என்று சிலப்பதிகாரக் காப்பியம் தென்தமிழ்நாட்டின் சிறப்பைக் குறிப்பிடுகிறது.

வஞ்சிக் காண்டத்தின் காட்சிக் காதை தொடங்குகிறது. சேரன் செங்குட்டுவன் மலைவளம் கானத் தனது பரிவாரம் மற்றும் படைகளுடன் செல்கிறான். அவ்வரசனை மலைவாழ் மக்கள் சிறப்பாக வரவேற்கின்றனர். மலையில் விளைந்த சிறந்த பொருள்களைக் காணிக்கையாகச் சேரனிடம் கொண்டுவந்து குவித்தனர்.

அந்த மலைவாழ் மக்கள் மன்னனிடம், காட்டில் உள்ள வேங்கை மரத்தின்கீழ் ஒரு காரிகை, ஒரு முலை இழந்து,