பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 243

தனித்துயர் எய்தி, வானவர் போற்றத் தன் கணவனோடு கூடி வானகம் சென்றாள். அவள் எந்நாட்டவளோ, யார் மகளோ வன்று கூறினர். அப்போது,

"மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு

கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த தண்டமி ழாசான் சாத்தன்இஃ துரைக்கும்” தண்டமிழாசானாகிய சாத்தனார் மன்னனிடம் கண் ண கியின் கதையை விரிவாக எடுத்துரைத்தார். பெரும்புலவர் சாத்தனாரை இங்கு தண்டமிழ் ஆசான் சாத்தன் எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பாகும்.

வஞ்சிக் காண்டத்தின் காட்சிக் காதையில் வஞ்சியின் பெருமை, சேர மன்னன் செங்குட்டுவனின் பெருமை, வீரம், புகழ் ஆகிய சிறப்புகள் பற்றி இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

"குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்

நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும் பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை, பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்துஎன் வாய்வாழ் மலைந்த வஞ்சிசூ டுதும்எனப் பல்யாண்டு வாழ்கநின் கொற்றம்” வன்பது காப்பிய அடிகளாகும்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையெடுக்க இமயம் போகும்போது யாராவது வடநாட்டு மன்னர் அவரை எதிர்த்தார்களானால், அவர்களை வென்று, வஞ்சி மாலை சூடிச் செல்வோம் என்னும் பொருள்பட இந்த அடி கள் சேரன் பெருமையைக் கூறுகின்றன.

சேரன் செங்குட்டுவனுடைய புகழ்மிக்க அமைச்சர், வில்லவன் கோதை. அந்த அமைச்சர் சேரன் செங்குட்டுவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பேசினார். அவர் தமது தமிழ்ப்படைகளுடன் வடபுல மன்னர்களை எதிர்த்துப்