பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 24Կ

இதில் தமிழகம் தனது தன்மையுடன் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றையும் தொகுத்து விரித்துத் தனதாக்கிக் கொண்டு தனது ஒழுக்கங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்மொழியானது எழுத்து, அதனால் கூடிய சொல், அதிலிருந்து எழுந்த பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணமும், அகம் புறம் என இரு இலக்கியப் பிரிவுகளும் கொண்டது. அகம் புறம் என்னும் பொருள் பிரிவில் இசைவழியில் பாடல், அதற்குரிய யாழ் குழல் முதலிய இசைக்கருவிகளுடன் பண், தாளம், கூத்தரங்கம், விலக்குறுப்பு, ஆடல் ஆகியவை இணைகின்றன. வரிக்கூத்தும் குரவைக்கூத்தும் இவைகளுடன் சேருகின்றன. இவை பற்றியெல்லாம் செந்தமிழின் இயல்போடு, அதற்குரிய தனித்தன்மையோடு நிழலில் தெரியும் குன்றத்தைப்போல ஆசிரியர் எடுத்துக் காட்டிச் சிறந்த கருத்துகளை வெளிப்படுத்தும் சிலப்பதிகாரக் கதை நிறைவுபெறுகிறது என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு இளங்கோவடிகளார் தமது இனிய காப்பியத்தில் தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழரசர்கள், தமிழ்நாட்டின் ஆறுகள், மலைகள், தமிழ்நாட்டின் திணை, பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள், தொழில் வாணிபம், வழிபாடு முதலியவைகளின் தனிச்சிறப்புகளைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எடுத்துக்கூறுவதைக் காண்கிறோம். அவற்றைப் படித்துப் படித்து இன்புறுகிறோம். அறிவு பெறுகிறோம். இளங்கோவடிகள் வாழ்க, அவர் புகழ் ஒங்குக, அவர் வளர்த்த தமிழ் வாழ்க, வளர்க. திவ்யப்பிரபந்தத்தில்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திவ்யப்பிரபந்தப் பாடல்களில் தமிழ் துள்ளி விளையாடுவதைக் காணலாம். ஆழ்வார்கள் தங்கள் பாடல் தொகுப்புகளைத் தமிழ் மாலையென்றே குறிப்பிடுகிறார்கள்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்

செவ்வடி செவ்வித் திருக்காப்பு"