பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்று தொடங்கும் பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டுப் பாடல்கள் இன்பத் தமிழ்ச்சுவைமிக்க இனிய தமிழ்ப்பாடல்களாகும். தமிழால் மணிவண்ணனுக்கு ஆழ்வார் பல்லாண்டு பாடுகிறார்.

கண்ணனின் அம்புலிப் பருவத்தை வியந்து பாடும் வில்லிபுத்துரர் விட்டுசித்தர்,

"மைத்தடங் கண்ணி யசோதை

தன்மக னுக்கு,இவை ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம், ஒளிபுத்துார் வித்தகன் விட்டு சித்தன்

விரித்த தமிழிவை எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்கிடர் இல்லையே" என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

கண்ணனின் செங்கீரைப் பருவத்தைப்பற்றிப் பாடும் ஆழ்வார் :

"அன்னமும் மீனுருவும் ஆளரி யுங்குறளும்

ஆமையும் ஆனவனே ! ஆயர்கள் நாயகனே என்அவ லம்களைவாய் ! ஆடுக செங்கீரை

ஏழுல கும்.உடையாய் ஆடுக ஆடுகளன்று அன்ன நடைமடவாள் அசோதை உகந்தபரிசு

ஆன புகழ்ப்புதுவைப் பட்டன் உரைத்ததமிழ் இன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்.உலகில்

எண்டிசை யும்புகழ்மிக்கு இன்பம தெய்துவரே !” என்று அந்தப் பத்துப் பாடல்களைப்பற்றிப் "புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப்பத்தும்" என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.

இரண்டாம் பத்தில் கண்ணனை நீராட அழைக்கும் பாடல்களில்,

"கார்மலி மேனி நிறத்துக்

கண்ண பிரானை யுகந்து வார்மலி கொங்கை யசோதை

மஞ்சன மாட்டிய வாற்றை