பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 251

பார்மலி தொல்புது வைக்கோன்

பட்டர் பிரான்சொன்ன பாடல் சீர்மலி செந்தமிழ் வல்லார்

தீவினை யாது மிலரே !” என்று பாடுகிறார். இதில் சீர்மலி செந்தமிழ் என்று

பட்டர்பிரான் குறிப்பிடுவதைக் காணலாம்.

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் "அஞ்சன வண்ணனை' என்று தொடங்கும் பாடல் வரிசையில்

"என்றும் எனக்கினி யானை என்மணி வண்ணனை கன்றின் பின்போக்கி னேன்னன் றசோதை கழறிய பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல் இன்தமிழ் மாலை வல்ல வர்க்கிட ரில்லையே” என்று பாடுகிறார்.

"நல்லதோர் தாமரை” என்னும் பாடல் வரிசையில் "மாயவன் பின்வழி சென்று

வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியி லும்புக்கு

அங்குத்தை மாற்றமு மெல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைத்

தண்புது வைப்பட்டன் சொன்ன துாய தமிழ்பத்தும் வல்லார்

தூமணி வண்ணனுக் காளரே !" என்று துாய தமிழில் பாடுகிறார்.

"என்னாதன்” என்று தொடங்கும் இனிய பாடல்களில் "நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல லில்லையே” என்று பாடுகிறார்.

நான்காம் பத்தில் "தங்கையை மூக்கும்” என்று தொடங்கும் பாடல்கள் பத்தில்,

"பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்

துறைபுரு டோத்தம னடிமேல் வெங்கலி நலியா வில்லிபுத் துார்க்கோன்

விட்டுசித் தன்விருப் புற்று