பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை

தங்கிய நாவுடை யார்க்கு

கங்கையில் திருமால் கழலினைக் கீழே குளித்திருந் தகணக் காமே !”

என்று பாடுகிறார்.

திருவரங்கம் பெரிய கோயிலின் மகிமையைப்பற்றிய பாடல்களில்,

"பருவரங்க ளவைபற்றிப்

படையாலித் தெழுந்தானை செருவரங்கப் பொருதழித்த

திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை

விட்டுசித்தன் விரித்தனகொண்டு இருவரங்கம் எரித்தானை

ஏத்தவல்லார் அடியோமே”

என்று பாடுகிறார்.

திருவரங்கத் திருப்பதியைப்பற்றிய பாடல்களில், “கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப்

படையுடையான் கருதும் கோயில் தென்னாடும் வடநாடும் தொழநின்ற

திருவரங்கத் திருப்ப தியின்மேல் மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்

விரித்ததமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்

இணைபிரியா திருப்பர் தாமே !”

என்று பாடுகிறார்.

ஐந்தாம் பத்தில் “வாக்குத் துாய் மை” என்று தொடங்கும் பாடல் தொகுதியில்

“காமர் தாதை கருதலர் சிங்கம்

கான வினிய கருங்குழற் குட்டன் வாம னன்என் மரகத வண்ணன்

மாத வன்மது சூதனன் றன்னை சேம நன்கம ரும்புது வையர்கோன்

விட்டு சித்தன் வியன்தமிழ் பத்தும் நாம மென்று நவின்றுரைப் பார்கள்

நண்ணுவா ரொல்லை நாரண னுலகே"