பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 253

என்று பாடுகிறார். இவ்வாறாகப் பெரியாழ்வாராகிய விட்டு சித்தர் கமது திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைத் தமிழ்ப்பாடல் என்பதில், விாத்த தமிழிவையென்றும், தமிழ் இன்னிசை மாலையென்றும், சீர்மலி செந்தமிழ் என்றும், இன்தமிழ் மாலையென்றும், புதுவைப் பட்டன் சொன்ன துய தமிழ் என்றும், செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் என்றும், அன்பால் செய்த தமிழ் மாலையென்றும், திருவரங்கத்தமிழ் மாலையென்றும், விட்டு சித்தன் விரித்த தமிழ் என்றும், விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் என்றும் சிறப்புறக் குறிப்பிடுகிறார்.

ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைப் பாடல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை; தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் அறிமுகமாகியுள்ள அருமையான தமிழ்ப் பாடல்கள், பக்திச்சுவையும் தமிழ்ச்சுவையும் நிரம்பியவை: மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீதிதோறும் பாடப்படும் இனிய பாவைப்பாடல்கள், நெய்யும் பாலும், மையும் மலரும், நீங்காத செல்வங்களும், குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களும், நாடும் புகழும் ஆடைகளும் பால்சோறும் கூடிய மணம் நிறைந்த இனிய பாடல்களாகும்.

நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம், நாராயணன், பாற்கடலுள் துயிலும் பரமன், ஒங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக்கண்ணன், பத்மநாபன், மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், தாமோதரன், புள்ளரையன், நாராயண மூர்த்தி, கேசவன், மாவாய்ப் பிளந்தான், தேவாதி தேவன், மாமாயன், மாதவன், வைகுந்தன், முகில்வண்ணன், சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணன், மணிவண்ணன், நெடுமால், கோவிந்தன் என்றெல்லாம் நாமம் பல சொல்வி நாராயணனைப் பாடும் இனிய பாடல்களாகும் அவை. அந்த அற்புதமான தமிழ்ச்சுவைமிக்க முப்பது பாடல்களின் நிறைவாக,

"வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி,

அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன