பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

'தருதுயரம் தடாயேல்" என்னும் பாடல் தொகுதியில் "கொற்றவேல் தானைக் குலசே கரன்சொன்ன, நற்றமிழ் பத்தும் வல்லார் நண்னார் நரகமே” என்றும்,

"ஏர்மலர்ப் பூங்குழல்” என்று தொடங்கும் பாடல் தொகுதியில், "கொல்லி நகர்க்கிறைக் கூடற் கோமான் குலசே கரன்இன் னிசையில் மேவி சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந் தானே” என்றும், -

"ஆலை நீள்கரும்பு” என்று தொடங்கும் பாடல் வரிசையில், "கொல்லிக் காவலன் மாலடி முடிமேல் கோல மாம்குல சேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுக்கே" என்றும்,

"மன்னுபகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே." என்று தொடங்கும் பாடல் வரிசையில்

"கன்னிநன்மா மதிள்புடைசூழ்

கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் 'தாலேலோ

என்றுரைத்த தமிழ்மாலை கொல்நவிலும் வேல்வலவன்

குடைக்குலசே கரன்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே!”

என்றும்,

“வன்தாளினினை வணங்கி” என்று தொடங்கும் பாடல் வரிசையில்

'கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்

குடைக்குலசே கரன்சொற் செய்த சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்

தீநெறிக்கண் செல்லார் தாமே!” என்றும்,

"அங்கனெடு மதிள்புடைசூழ்” என்று தொடங்கும் பாடல் வரிசையில்,