பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 257

கோழியர்கோன் குடைக்குலசேகரன்சொற் செய்த நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலம்திகழ் நாரணடிக்கீழ் நண்ணு வாரே என்றெல்லாம் தமிழ்ச் சிறப்பைக் குறிப்பிட்டுப் பாடுவதைக் காண்கிறோம்.

குலசேகராழ்வார் தமது பாடல்களில் தமிழின் சிறப்புகள் குறித்து, "நடைவிளங்கு தமிழ்மாலை" என்றும், "சொல்லினில் தமிழ் மாலை வல்லவர்” என்றும், "பன்னிய நூல் தமிழ் வல்லார்” என்றும், "நற்றமிழ் பத்தும் வல்லார்” என்றும், "இன்தமிழ் மாலை" என்றும், "நல்லிசைத்தமிழ் மாலை" என்றும், "சீரார்ந்த தமிழ் மாலையிவை என்றும், “நல்லியலின் தமிழ் மாலை பத்தும்' என்றும் இனிய தமிழ்ச்சொற்களில் நயம்படப் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலைப் பாசுரங்கள் அனைத்தும் அரங்கனைப் பற்றியனவேயாகும். இவ்வாழ்வார் திருவரங்கனைத் தவிர வேறு யாரைப்பற்றியும் பாடவில்லை. அவர் திருவரங்கத்தின் சிறப்பையும் காவிரியின் சிறப்புகளைப்பற்றியும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பக்திச்சுவை நிர்ம்பப் பாடியுள்ளார். இந்தப் பாசுரங்கள் அனைத்தும் தமிழ்ச்சுவை நிரம்பியவை.

திருவரங்கத்தைப்பற்றி "வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல்மீ தனவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோ னமரும் சோலை, அணிதிரு வரங்க மென்னா" என்று பாடுகிறார். இன்னும், "சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில்” என்றும், "கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு மாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் என்றும், வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம்" என்றும், "ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கம்" என்றும், "தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கம்” என்றெல்லாம் திருவரங்கத்தின் சிறப்புப்பற்றியும் அச்சிறப்பிற்குக் காரணமான காவிரியின் வளத்தைப்பற்றியும் பாடுகிறார்.