பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இயற்கை வளமும் உயிரின வளமும்

தமிழகம் உள்ளிட்ட பாரத நாடு இயற்கை வளமும் இதர எல்லா வளங்களும் நிறைந்தது. அதன் மலைகள், ஆறுகள், கடல், கடற்கரைகள், தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் இதர உயிரினங்களின் வளம் நிறைந்தது. அவை மனிதனுக்குத் துணையானவை; பக்க பலமாக இருப்பவை. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் திவ்யப்பிரபந்தத்திற்கும் தமிழகமே களமாகும். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஆண்ட பூமியும், பின்னர் பல்லவர்களும் ஆண்ட தொண்டை மண்டலமும் சேர்ந்து தமிழகமாகும். இந்த நான்கு பிரிவு மன்னர்களுங்கூடத் தங்கள் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக அவர்களுக்குள் பல போர்கள் நடந்த வரலாறும் தமிழக வரலாற்றின் பகுதியாக உள்ளன.

பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் நடந்த போர்கள், சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடந்த போர்கள், பாண்டியர்களுக்கும் சேரர்களுக்குமிடையில் நடந்த போர்கள், அவைகளின் விவரங்கள், அப்போர்களில் கலந்துகொண்ட மன்னர்கள், அவர்களின் வீரம், வெற்றி தோல்விகள் முதலியவை களெல்லாம் இக்காலத்திய தமிழ்ப்புலவர் பட்டம் பெறுவதற்குப் பாடப்புத்தகங்களில் பாடங்களாக உள்ளன.

ஆயினும், தமிழ் மக்களின் வரலாறு என்பது இந்தப் போர்களின் வரலாறு மட்டுமல்ல; அப்போர்களை நடத்திய மன்னர்களின் வரலாறு மட்டுமல்ல. தமிழகத்தின் வற்றாத வளங்களைப் பயன்படுத்தித் தமிழ்மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் நிர்மாணித்