பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 259

திருமங்கையாழ்வார் பெருமான், தமது சொந்த வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வைணவத்திற்கு வந்தவர்; திரும்ாலடியார் ஆனவர்; நாராயண மந்திரத்தின் பெருமையை உலகிற்குச் சிறப்பாக எடுத்துக் கூறியவர்.

அவர் பாடியுள்ள "வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் என்று தொடங்கும் பாசுரங்கள் மிகச்சிறப்பு மிக்கவை; அனைவராலும் விரும்பிப் பாடப்படுபவை. அந்தப் பாடல் தொகுதியின் நிறைவாக,

"மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்

மங்கையார் வாள்கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வநன் மாலை

இவைகொண்டு சிக்கெனத் தொண்டிர் துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின்

துயரிலிர் சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு

நாராய னாவென்னும் நாமம்" என்று அனைவரையும் அழைத்துச் செந்தமிழ்ச் செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலை மூலம், நாராயண நாமத்தைப் புகட்டி அப்பாடல்களைப் பாடச் சொல்லுகிறார். பெரிய திருமொழியின் முதல் பத்தில் திருச்சாளக் கிராமத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைப்பற்றிய "கலையும் கரியும் பரிமாவும்" என்று தொடங்கும் பாடல் தொகுப்பின் முடிவில்

"தார வாரும் வயல்சூழ்ந்த

சாளக் கிராமத் தடிகளை காரார் புறவில் மங்கைவேந்தன்

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை ஆரா ருலகத் தறிவுடையார்

அமரர் நன்னாட் டரசாள பேரா யிரமும் ஒதுமின்கள்

அன்றி யிவையே பிதற்றுமினே" என்று பாடுகிறார். இங்கு கலியன் திருமங்கை மன்னன் ஒலி செய்யும் தமிழ்மாலையாகக் குறிப்பிடப்படுகிறது.