பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சிங்கவே ள் குன்றத்தில் எழுந்தருளியுள் ள எம்பெருமானைப் பற்றி 'அங்கண் ஞாலம்” என்று கொடங்கும் பாடல் வரிசையின் முடிவில்,

செங்கண் ஆளி யிட்டிறைஞ்சும்

சிங்க வேள்.குன் றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை

இருந்த மிழ்நூல் புலவன் மங்கை யாளன் மன்னுதொல்சீர்

வண்ட றைதார்க் கலியன் செங்கையா ளன்.செஞ் சொல்மாலை

வல்ல வர்தி திலரே”

என்று பாடுகிறார்.

இங்கு, "இருந்தமிழ் நூல் புலவன் மங்கையாளன்" என்று திருமங்கையாழ்வார் தம்மைக் குறிப்பிடுகிறார்.

"கொங்கலர்ந்த மலர்” என்று தொடங்கும் பr . தொகுப்பில்,

“செங்க யல்திளைக் குஞ்சு னைத்திரு

வேங்க டத்துறை செல்வனை மங்கை யர்தலை வன்கலி கன்றி

வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள் சங்கை யின்றித் தரித்து ரைக்கவல் லார்கள் தஞ்சம தாகவே வங்க மாகடல் வையங் காவலர்

ஆகி வானுல காள்வரே" என்று பாடுகிறார். இங்கு மங்கையர் தலைவன் கலியன் தொடுத்த வண்டபமிழ் செஞ்சொல் மாலைகள் என்று சிறப்பாகத் தமது பாடல்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்

இரண்டாம் பத்தில் "வானவர் தங்கள் சிந்தை போல’ என்று தொடங்கும் பாடல் வரிசையில்

"மின்னு மாமுகில் மேவு தண்திரு

வேங்க டமலை கோவில் மேவிய அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமான

கன்னி மாமதிள் மங்கை யர்கலி கன்றி யின்தமி ழால்உ ரைத்தஇம்

மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே"