பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 263

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்

கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் --

தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே !” என்று தமது பாடல்களைச் சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் என்று மிகச் சிறப்பாக ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

"து.ாவிரிய மலருழக்கி" என்று தொடங்கும் பாசுரத் தொகுதியின் முடிவாக,

“மையிலங்கு கருங்குவளை

மருங்கலரும் வயலாலி நெய்யிலங்கு சுடராழிப்

படையானை நெடுமாலை கையிலங்கு வேல்கவியன்

கண்டுரைத்த தமிழ்மாலை ஐயிரண்டும் இவைவல்லார்க்

கருவினைக ளடையாவே!" என்று பாடியுள்ளார்.

"கள்வன்கொல் யானறியேன்” எனத் தொடங்கும் பாடல் வரிசையில்,

"தாய்மனம் நின்றிரங்கத்

தனியேநெடு மால்துணையா போயின பூங்கொடியாள்

புனலாலி புகுவரென்று காப்சின வேல்கவியன்

ஒலிசெய்தமிழ் மாலைபத்தும் மேவிய நெஞ்சுடையார்

தஞ்சமாவது விண்ணுலகே" என்று தமது பாடல்களை ஒலிசெய் தமிழ்மாலை என்று குறிப்பிடுகிறார்.

'நந்தா விளக்கே” என்று தொடங்கும் பாடல் தொகுதியில்,

"வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர்

மணிமாடக் கோயில்நெடு மாலுக்கு என்றும் தொண்டாய தொல்சீர் வயல்மங்கை யர்கோன்

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்,