பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கண்டார் வணங்கக் களியானை மீதே

கடல்சூழ் உலகுக் கொருகா வலராயப் விண்தோப் நெடுவெண் குடைநீழ லின்கீழ்

விரிநீர் உலகாண்டு விரும்பு வரே” என்று ஆழ்வார் தம் பாடல்களைக் கலியன் ஒலி செய் தமிழ்மாலை எனச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

"சலங்கொண்ட இரணியன்” என்று தொடங்கும் பாடல் வரிசையில் -

"மங்கையர்தம் தலைவன்மரு வலர்தம்உடல் துணிய

வாள்வீசும் பரகாலன்

கலிகன்றி சொன்ன சங்கமலி தமிழ்மாலை --

பத்திவைவல் லார்கள்

தரணியொடு விசும்பாளும்

தன்மைபெறு வாரே” என்று சங்கமலி தமிழ்மாலை பத்து எனக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். - -

நான்காம் பத்தில் "போதலர்ந்த பொழில் சோலை” என்று தொடங்கும் பாடல் தொகுதியில் - --

"காரார்ந்த திருமேனிக் கண்னன்அமர்ந்

துறையுமிடம் சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ

னார்தொகைமேல், கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ்

பத்தும்வல்லார் ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ

டிருப்பாரே !” என்று பாடியுள்ளார்.

ஐந்தாம் பத்தில், "தாம் தம் பெருமையறியார்” என்று தொடங்கும் பாடல் தொகுதியின் முடிவில்,

“காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்

மேவித் திகழும் கூட லூர்மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாடப் பாவம் போமே !”