பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 265

என்று தம் பாடல்களைக் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாக்கள் எனக் குறிப்பிடுகிறார்.

"கைம்மான " என்று தொடங்கும் பாடல் வரிை "ஆமருவி நிரைமேய்த்த

அணியரங்கத் தம்மானை காமருசீர்க் கலிகன்றி

யொலிசெய்த மலிபுகழ்சேர் நாமருவு தமிழ்மாலை

நாலிரண்டோ டிரண்டினையும் தாமருவி வல்லார்மேல்

சாராதி வினைதாமே"

என்று நாமருவு தமிழ் மாலை எனக் குறிப்பிட்டுப் பாடுவதைக் காணலாம்.

ஆறாம் பத்தில் “வண்டுனும் நறுமலர்” என்று தொடங்கும் பாடல் தொகுதி திருவிண்ணகர், ஒப்பிலியப்பனைப்பற்றிய தமிழ்ச்சுவை மிக்க பாசுரங்கள் கொண்டதாகும். இப்பாடல் தொகுதியின் முடிவில்,

"பூமரு பொழிலணி விண்ண கர்மேல்

காமரு சீர்க்கலி கன்றி சொன்ன பாமரு தமிழிவை பாட வல்லார் வாம னன்.அடி யிணைமரு வுவரே”

என்று அருமையாகப் பாடுகிறார்.

"பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்” என்று தொடங்கும் பாடல் தொகுதியில்

"தேனார் பூம்புறவில்

திருவிண்ணகர் மேயவனை வானா ரும்மதில்சூழ்

வயல்மங்கையர் கோன்மருவார் ஊனார் வேல்கலியன்

ஒலிசெய்தமிழ் மாலைவல்லார் கோனாப் வானவர்தம்

கொடிமாநகர் கூடுவரே."

என்று ஆழ்வார் பாடுகிறார்.