பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப0 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபநதமும்

இவ்வாறு திருமங்கையாழ்வார் பெருமான் தம் பாடல் தொகுதிகளைச் செஞ்சொலால் எடுத்த தெய்வநன் மாலை யென்றும், கலியன் ஒலிசெய் தமிழ்மாலை யென்றும், இருந்தமிழ் நூல்புலவன், செங்கையாளன் செஞ்சொல் மாலை என்றும், வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள் என்றும், கலிகன்றி இன்தமிழால் உரைத்த இம்மன்னு பாடல் என்றும், கலியன் கொண்ட சீரால் தண்டமிழ் செய்மாலை யென்றும், கலியன் குன்றாதுரைத்த சீர்மல்கும் செந்தமிழ் மாலை யென்றும், கலியன் விரித்துரைத்த பாவு தண்டமிழ் பத்திவை யென்றும், கலியன் சொன்ன சங்க முகத்தமிழ் மாலை யென்றும், கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை யென்றும், கலியன் ஒலிசெய் தமிழ்மாலை யென்றும், கலியன் சொன்ன சங்கமலி தமிழ்மாலை யென்றும், கலியன் கூறு தமிழ்பத்தும் என்றும், கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாடல்கள் என்றும், கலியன் ஒலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ்மாலை யென்றும், கலியன் சொன்ன பாமரு தமிழிவை யென்றும், கலியன் ஒலிசெய் தமிழ் மாலை என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அப்பாடல்களில் ஆழ்வாரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்று சிறப்பாகப் புலப்படுகிறது.

திருமங்கையாழ்வார் சோழநாட்டைச் சேர்ந்த ஆலி நாட்டுக் குறுநில மன்னராவார். திருமங்கை மன்னர் என்றும், ஆலி நாடர் என்றும் வழங்கப்படுபவர். இவர் சோழப் பேரரசின் படைத்தலைவராய் இருந்து பணியாற்றியவர். நாலு கவிப்பெருமாள் என்று புகழ் பெற்றவர். சோழ நாட்டைச் சிறப்பித்து இவர் பாடியுள்ள பாடல்கள் சிறப்புமிக்கவ்ை தமிழ்ச்சுவை மிக்கவை.

திருநரையூர் சென்று அங்கு எழுந்தருளியுள்ள திருமாலைச் சேவித்து, அப்பெருமாளின் திருவருளைப் பெறுமாறு உலகோர் அனைவரையும் வேண்டுகிறார். "அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்

அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி

கூடினான் திருவடியே கூட கிற்பீர்