பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழநாடும 267

வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு

மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்

செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே!”

என்று ஆழ்வார் உள்ளம் நெகிழ்ந்து பாடுகிறார். இப்பாடல் தொகுதியில் அவர் சோழநாட்டையும் அதன் வளத்தையும் சோழ மன்னனையும் காவிரியின் சிறப்பையும் சிறப்பித்துப் பாடுவதைக் காண்கிறோம்.

அடுத்தடுத்த பாசுரங்களில் செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும்,

"கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற

கழல்மன்னர் மணிமுடிமேல் காக மேற தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும்,

"வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற

விறல்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும், -

- - "மேலெழுந்து விலங்கல் பாய்ந்து பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்

புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னி நாடன் தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும்,

"மின்னாடு வேலேந்து விளந்தை வேளை

விண்னேறத் தனிவேலுய்த் துலகம் ஆண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே”

என்றும்,