பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 271

"செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்

கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை இருநீரின்தமி ழின்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர் வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே"

என்று பாடியுள்ளார்.

ஒன்பதாம் பத்தில் திருக்கோட்டியூர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பிரானைப்பற்றி “எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன்" என்று தொடங்கும் பாடல் தொகுதியில்,

"கோவை யின்தமிழ் பாடு வார்குடம்

ஆடு வார்தட மாம லர்மிசை மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர் மேவு நான்மறை வாணர் ஐவகை

வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும் தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே" என்றும்,

"ஆலுமா வலவன் கலிகன்றி

மங்கையர் தலைவன் அணிபொழில் சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை நீல மாமுகில் வண்ண னைநெடு

மாலை இன்தமி ழால்நி னைந்தஇந் நாலும் ஆறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே"

என்று ஆழ்வார் பெருமான் பாடி மகிழ்கிறார்.

பத்தாம் பத்தில் "எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே?” என்று தொடங்கும் பாடல் வரிசையில்,

“நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்

வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய் அன்றாய்ச் சியர்வெண் ணெய்வி ழுங்கி உரலோடு ஆப்புண் டிருந்த பெருமான் அடிமேல் நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்,

கலியன் ஒலிசெய் தமிழ்மா லைவல்லார் என்றானும் எய்தார் இடர்,இன்ப மெய்தி

இமையோர்க்கும் அப்பால் செலவெய் துவாரே' என்று பாடுகிறார்.