பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 273

மன்னுமா மணிமாட மங்கை வேந்தன்

மாணவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்

பழவினையை முதலரிய வல்லார் தாமே” என்றும் சிறப்பாகப் பாடியுள்ளார்.

பொய்கையாழ்வார் அருளிச்செய்த இயற்பா, முதல் திருவந்தாதியின் தனியனாக,

"கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு - வையத்து அடியவர்கள் வாழ அருந்தமிழந் தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து" என்று முதலியாண்டான் குறிப்பிடுகிறார். இந்த நூறு பாசுரங்களும் இனிய தமிழ்ப்பாசுரங்களாகும்.

பூதத் தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதிப் பாசுரங்களில்

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்” என்று தொடங்குகிறார். மேலும்,

"யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்

யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்றும் பாடுகிறார். இங்கு “ஞானத்தமிழ் புரிந்த நான்" என்றும், இருந்தமிழ் நன்மாலை' என்றும் "பெருந்தமிழன் நல்லேன்" என்றும் தமிழைச் சிறப்பித்து ஆழ்வார் பாடுகிறார்.

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதிப் பாசுரங்களில் ஆழ்வார், கண்ணனே தனது உள்ளத்தில் தமிழை விதைத்துத் தன்னைப் பண்படுத் தினார் என்றும், தான்கற்ற மொழியாகத் தமிழ் தன் உள்ளத்தில் கலந்துவிட்டது என்றும் கூறுகிறார்.