பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 275

"வண்ண மாமனிச் சோதியை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலைத்

தென்குரு கூர்ச்சட கோபன் பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள்

இவைபன் னிரண்டும் பண்ணில் பன்னிரு நாமப்பாட்

டண்ணல்தாள் அணைவிக்குமே” என்று பாடுகிறார்.

திருவாய்மொழி இரண்டாம் பத்தில் "அனைவது அரவனைமேல்” என்று தொடங்கும் பாடல் வரிசையில்,

"கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை

வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் பண்டலையில் சொன்னதமிழ் ஆயிரத்துப் பத்தும்வல்லார் விண்டலையில் வீற்றிருந் தாள்வரெம் மாவீடே." என்று பாடியுள்ளார்.

நான்காம் பத்தில் "நண்ணாதார் முறுவலிப்ப" என்று தொடங்கும் பாசுரத் தொகுதியின் முடிவாக,

"திருவடியை நாரணனைக்

கேசவனைப் பரஞ்சுடரைத் திருவடிசேர் வதுகருதிச்

செழுங்குருகூர்ச் சடகோபன் திருவடிமே லுரைத்ததமிழ்

ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும்

திருவடிசேர்ந் தொன்றுமினே!" என்று பாடுகிறார்.

ஐந்தாம் பத்தில் 'கையார் சக்கரத் தென் கருமாணிக்கமே என்று தொடங்கும் பாடல் தொகுதியின் முடிவில்,

“கார்வண்ணன் கண்ணபிரான்

கமலத்தடங் கண்ணன்றன்னை ஏர்வளவொண் கழனிக்

குருகூர்ச்சட கோபன்சொன்ன