பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 277

"துவளில் மாமணி” என்று தொடங்கும் பாசுர வரிசையில்,

"சிந்தையாலும் சொல்லாலும் செய்கையி

னாலும் தேவ பிரானையே தந்தை தாயென்றடைந்த வண்குரு

கூரவர் சடகோபன் சொல் முந்தை யாயிரத்துள் இவை தொலை

வில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ்ப் பத்தும் வல்லவரடிமை செய்வார் திருமாலுக்கே." ஏழாம் பத்தில் ‘மாயா வாமனனே மதுசூதா ! நீயருளாய்” என்று தொடங்கும் பாசுரத் தொகுதியின் முடிவில்,

"ஆம்வண்ண மின்னதொன் றென்றறி

வதரிய அரியை ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட

கோபன் அறிந்துரைத்த ஆம்வண்ண வொண்டமிழ் களிவை

யாயிரத் துளிப்பத்தும் ஆம்வண்ணத் தாலுரைப் பாரமைந்

தார்தமக் கென்றைக்குமே !” என்று பாடியுள்ளார்.

“என்றைக்கும்' என்று தொடங்கும் பாசுரத் தொகுதியில் முதல் பாசுரத்திலேயே ஆழ்வார் "இன்றமிழ் பாடிய ஈசனை யாதி யாய்' என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

"என்றைக்கும் என்னைஉய் யக்கொண்டு போகிய

அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய் நின்றவென் சோதியை என்சொல்லி நிற்பனோ?” என்று ஆதியாய், நின்ற சோதியாக நின்ற ஈசனே இனிய தமிழில் பாடியதாக ஆழ்வார் குறிப்பிடுவது தமிழில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் குறிக்கிறது.

எட்டாம் பத்தில் "கரு மாணிக்க மலைமேல்" என்று தொடங்கும் பாசுர வரிசையின் நிறைவாக,