பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

ஆரமாகவும், கருமேகங்களைக் கூந்தலாகவும் கொண்ட அகண்ட நிலப்பரப்பைக்கொண்ட நிலமடந்தை' என்று நாட்டு வளத்தை இனைத்து இளங்கோவடிகள் விவரிக்கிறார்.

" அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து -

ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல் கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை” என்பன காப்பிய அடிகள்.

தெய்வம் ஏறப்பெற்ற மறக்குல மகளிர் மன்னனை வாழ்த்தும்போது பெருநில மன்னன் ஆளும் நாடு முழுவதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரப்பதாக என்று சாமியாடிக்கொண்டு கூறுவதாக

" பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்

பசியும் பிணிையும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" என்று நாட்டு வளத்தையும் மக்கள் நலனையும் இணைத்துக் குறிப்பிட்டுப் பாடுகிறார், இளங்கோவடிகள்.

இந்தப் பாடல் அடிகள், இளங்கோவடிகளின் மிக உயர்ந்த மனிதாபிமான தத்துவஞானக் கருத்தைக் குறிக்கிறது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பசி நீங்க வேண்டும். வயிறார அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். பிணிகள் நீங்கி மனித சமுதாயம் நல்வாழ்வு பெறவேண்டும். போர்கள் ஒழிந்து, பகைகள் நீங்கி, நாடுகளும் மக்களும் அமைதியான சேதமில்லாத வாழ்க்கையைப் பெறவேண்டும். மழை பொழிந்து, நீர்வளம் பெருகி, நாடு அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பது இளங்கோவடிகளின் சீரிய சிந்தனைகளாகும்.

உயர்ந்த சிகரங்களையுடைய இமய மலையையும், வற்றாத நீர்ப்பெருக்கினையுடைய கங்கையையும், அழகான உஞ்சை நகரையும், விந்திய மலையையும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளையும், திருவேங்கட மலையையும், தாங்கமுடியாதபடி பெரும் அளவில் விளைபொருள்களைக் கொடுக்கும் காவிரி நாட்டையும் தன் காதலிக்குக் காட்டிக்கொண்ட ஒரு விஞ்சையன் புகார் நகரில்