பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"நேர்பட்ட நிறைமூ வுலகுக்கும்

நாயகன் றன்னடிமை நேர்பட்ட தொண்டர்தொண் டர்தொண்டர்

தொண்டன்சட கோபன்சொல் நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்

துள்.இவை யோர்பத்தும் நேர்பட்டாரவர் நேர்பட் டார்நெடு

மாற்கடி மைசெய்யவே !” என்று தாம் பாடியுள்ள ஆயிரம் பாசுரங்களையும் தமிழ்மாலை என்ற்ே மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

ஒன்பதாம் பத்தில் "கொண்ட பெண்டிர்” என்று தொடங்கும் பாடல் வரிசையில், "ஆதும் இல்லை மற்ற

வனில்என் றதுவே துணிந்து தாது சேர்தோள் கண்ணனைக்

குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதி லாத வொண்டமிழ்கள்

இவைஆ யிரத்து வரிப்பத்தும் ஒத வல்ல பிராக்கள்.நம்மை

யாளுடை யார்கள் பண்டே' என்று பாடியுள்ளார்.

'அறுக்கு வினையாயின” என்று தொடங்கும் பாசுரங்களின் முடிவில்

"வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளானை திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன் பண்ணார் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார் மண்ணாண்டு மனம்கமழ் வர்மல் லிகையே” என்று பாடியுள்ளார். இதிலும் தமிழாயிரம் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

"மாலை நண்ணி என்று தொடங்கும் பாடல் வரிசைத் தொகுதியில்

"பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்

மாடநீ டுகுரு கூர்ச்சட கோபன்சொல் பாடலா னதமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியா டிப்பணி மின்அவன் தாள்களே!"