பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரம்” என்றும், "குருகூர்ச் சடகோபன் திருவடிமேல் உரைத்ததமிழ் ஆயிரம்” என்றும், "குருகூர்ச் சடகோபன் சொன்ன சீர்வண்ண வொண்டமிழ் என்றும், "குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரம்" என்றும், "குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை” யென்றும், "தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன செந்தமிழ்ப் பத்தும்” என்றும், "குருகூர்ச் சடகோபன் அறிந்துரைத்த ஆம்வுண்ன வொண்டமிழ் களிவை” என்றும், "இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்” என்றும், "சடகோபன் சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரம்" என்றும், 'குருகsர்ச் சடகோபன் சொன்ன தீதிலா வொண்டமிழ்கள் இவை ஆயிரம்” என்றும், "தென்குருகூர்ச் சடகோபன் பண்னார் தமிழாயிரத்தில் இப்பத்தும்” என்றும், "குருகர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழாயிரத்துள் இப்பத்தும்” என்றும், "என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ் நூல்" என்றும், "குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள்” என்றும், "குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழாயிரத்துள் இவை பத்தும்” என்றும் தமிழைச் சிறப்பித்துப் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

ஆழ்வார்கள் தனித்தமிழில் பக்திச்சுவையுடன் திருமாலைப்பற்றியும், திருமாலவதாரப் பெருமைகளைப் பற்றியும், திருமால் அவதாரங்களின் செயல் சிறப்புகள் பற்றியும், திருமால் பல வேறு பெயர்களில் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களைப்பற்றியும், திருமாலடியார்களைப்பற்றியும், அவ்வடியார்களின் பெருமைகளைப்பற்றியும், நான்மறை களைப்பற்றியும், அவைகளில் பொதிந்துள்ள சிறந்த சீரிய கருத்துகள்பற்றியும், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய பயன்பாடுகளைப் பற்றியும் மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளதைப்பற்றியும் தமிழ்மாலைகளாகக் கோத்து தமிழன்னைக்கும் பாரதத் தாயிற்கும் சமர்ப்பித்துள்ளதைக் காண்கிறோம்.