பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இன்னும்

'செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன்

வாழிய" என்றும், "செந்தமிழ்த் துரப்புல் திருவேங்கடவன்

வாழியே” என்றும் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆண்டாள் பாடல்களைப்பற்றிய சாத்துமுறைப்

பாடலில்,

"பாதங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்

வேத மனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு"

என்றும் குறிப்பிடுகிறது.

இராமானுஜ நூற்றந்தாதியில் திருமங்கையாழ்வார்

பாசுரங்களைப்பற்றியும் நம்மாழ்வார் பாசுரங்களைப்பற்றியும் சிறப்பித்து மிகப் பெருமைப்படுத்தியும் திருவரங்கத் தமுதனார் நெஞ்சாரப் பாடுகிறார். - "முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடிலும்

கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும் தனியா னையைத்தண் டமிழ்செய் நீலன் தனக்குலகில் இனியானை எங்கள் இராமா னுஜனைவந் தெய்தினரே" என்றும்,

“எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற் குலகில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம் உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே!”

என்றும்,

"உறுபெறும் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ் ஆரன மேயென்றிந் நீணிலத்தோர் அறிதர நின்ற இராமா னுசனெனக் காரமுதே'

என்றும்,