பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 27

நடைபெறும் இந்திர விழாவைக் காண வந்ததை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள்.

" சிமையத் திமையமும் செழுநீர்க் கங்கையும்

உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்தி” என்று காப்பிய அடிகள் கூறுகின்றன.

இங்கு இளங்கோவடிகள் குறிப்பிடும் மற்றொரு முக்கியமான கருத்தைக் காண்கிறோம். காவிரி நாட்டை மிகச் றெப்பாகத் “தாங்கா விளையுள் காவிரி நாடு” என்று குறிப்பிடுகிறார். இங்கு காவிரி நாட்டின் வளமும், நிறைவான விளைச்சலும் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் உயர்ந்த கெரங்களையுடைய இமயமும், செழுமையுடன் பொங்கி வரும் நீர்ப்பெருக்கினையுடைய கங்கை நதியும், மத்திய பதத்தின் சிறப்பும் கல்வியும் செல்வமும் நிறைந்த உஞ்சை நகரும் (உஜ்ஜைனி), விந்திய மலையும் அதைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளும், வனவளமும், புண்ணியம் மிக்க வேங்கட மலையும் இணைந்து பாரத நாட்டின் ஒற்றுமையும் இணைப்பும் குறிப்பிடப்படுகின்றன. எனவே, காவிரி நாட்டின் பிறப்பையும் பாரத நாட்டின் ஒற்றுமையையும் பெருமைப்பட

அடிகளார் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

தமிழகத்தின் எல்லைகளையும், இந்த வளம் நிறைந்த 1 , மியின் தலைசிறந்த அரசுகளின் தலைமையான நகரங்களையும் அடிகளார் சிறப்பாகக் குறிப்பிடும்போது அவருடைய தமிழ் நெஞ்சம், தமிழகத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மனத்தில் இருத்தி அதன் வளத்தையும் செல்வச் சிறப்பையும் கோடிட்டுக் காட்டுகிறது.

"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்

தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் அரைசுவிற் றிருந்த உரைசால் சிறப்பின்"