பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

“பொங்கொளி வண்டிரைக்கும் பொழில்வாழ் குயிலே" என்றெல்லாம் நாச்சியார் திருமொழி குறிப்பிடுகிறது. “மைப்பொழில் வாழ்குயில்காள், மயில்காள்

ஒண்கருவிளைகாள், வம்பக் களங்கனிகாள், வண்ணப்பூவை நறுமலர்காள்' என்றும் நாச்சியார் திருமொழியில் காண்கிறோம்.

இன்னும், கார்க்கோடற்பூக்காள், கோவை மனாட்டி, முல்லைப் பிராட்டி, பாடும் குயில்கள், கனமாமயில்கள், இன்னும் மழையே கடலே என்றும், கார்த்தண் முகிலும், கருவிளையும், காயா மலரும் கமலப் பூவும் என்றெல்லாம் இயற்கையோடியைந்த மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இனிய பாடல்களை நாச்சியார் திருமொழியில் காண்கிறோம்.

தொண்டரடிப்பொடியாழ்வார், திருவரங்கத்தின் இயற்கையழகைப்பற்றி மிக அழகாகப் பாடுகிறார் :

" வண்டினம் முரலும் சோலை,

மயிலினம் ஆடும் சோலை, கொண்டல்மீ தனவும் சோலை

குயிலினம் கூவும் சோலை” என்று பாடுவதைக் காண்கிறோம்.

தென்பெண்னை ஆற்றங்கரையில் திருக்கோவிலுரர் என்னும் திவ்ய தேசம் இருக்கிறது. அந்த ஊர் மிகவும் வளமானது, செழிப்புமிக்கது. அதன் செழுமையைப்பற்றி, 'செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவிலுார்” என்றும், கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரி வண்டிசை பாடும் பாடல் கேட்டு, தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவிலுார்” என்றும், "கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தின்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட, செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவிலுரர்" என்றும் பெரிய திருமொழிப் பாடல்களில் திருமங்கை யாழ்வார் பாடுகிறார்.

திருவயிந்திரபுரத்தைப்பற்றி “மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட, செய்ய