பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கொள்ளைகளும் நடந்து, பொருள் நாசங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இயற்கையாலும் செயற்கையாலும் ஏற்பட்ட பல கஷ்டங்களையும் இன்னல்களையும், துன்ப துயரங்களையும் தாங்கியும், சமாளித்தும், மனிதன் காடுகழனிகளையும், தோட்டம் துரவுகளையும், நீர்நிலைகளையும் தொழில் துறைகளையும், பாதைகளையும், சாலைகளையும், கோயில்களையும், குளங்களையும், ஆடல் பாடல்களையும் கவிதைகளையும், காவியங்களையும் இதர கலை இலக்கியங்களையும், ஆடை ஆபரணங்களையும், பொன்னையும் மணியையும் உலோகங்களையும் மற்றவைகளையும் உருவாக்கியும் நிர்மானித்தும் மனித சமுதாயத்திற்குத் தேவையான உணவு, உடை, வீடு, கல்வி, ஆடை ஆபரனங்கள், வேலை, விளையாட்டு வசதிகள், ஆடல்பாடல் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள் செல்வங்களையும், அறிவுச் செல்வங்களையும், ஆன்மிகச் செல்வங்களையும் உருவாக்கி மனித சமுதாயம் நாகரிகமடைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறது.

மனிதனின் இத்தகைய சாதனைகளைப்பற்றியெல்லாம் இளங்கோவடிகள் தமது "நெஞ்சையள்ளும் காப்பியத்திலும், ஆழ்வார்கள் தங்கள் தேனினும் இனிய பாசுரங்களிலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இலைமறைவு காயாகவும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

இளங்கோவடிகள் தமது சிறப்பான காப்பியத்தில் பூம்புகார் நகரம், அதில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கப் பகுதிகள், உறையூர், மதுரை, கொற்கை, வஞ்சி முதலிய நகரங்களையும் அந்த நகரங்களின் சிறப்புகள், வளம், வாணிபம், கோயில்கள், அறப்பள்ளிகள், ஊர்கள், விழாக்கள், வயல் வெளிகள், பசுமையான பயிர்கள், தோப்பு துரவுகள், நீர்நிலைகள், காய்கனிகள், மலர்களின் குவியல்கள், மக்களின் வாழ்க்கையின் சிறப்புகள், கல்வி கேள்விகள், ஆடை ஆபரணங்கள், ஆடல் பாடல்கள், இசை, நாடகங்கள் கூத்துகள், நடனம், சிற்பம் முதலிய கலைகள்பற்றியெல்லாம்