பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பட்டினப்பாக்கம் : இனிப் பட்டினப்பாக்க வீதிகளை இளங்கோவடிகளார் விவரித்துக் காட்டுவதைக் காணலாம். இங்கு ராஜ வீதி, தேர் ஒடும் ரத வீதிகள், பெரிய கடைத் தெருக்கள், பெரும் தன வணிகர்கள் வாழும் மாட மாளிகைகள் நிறைந்த வீதிகள், பார்ப்பனர் குடியிருப்புகள், அனைவரும் விரும்பும் உழவர் பெருமக்கள் வாழும் வீதிகள், ஆயுள் வேத வைத்தியர்களும், காலக் கணிதர்களும் (சோதிடர்கள்), தனித்தனியாக வாழும் வீதிகள், முத்துக் கோப்போர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் வாழும் அகன்ற வீதிகள், இன்னும் மற்றவர்களைப் போற்றிப் பாடும் சூதர், மாகதர், வேதாளிகர் ஆகியோர் வாழும் வீதிகள், நாழிகைக் கணக்கர், சாந்திக் கூத்தர், கணிகையர்கள், அகக் கூத்தர், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், தோல் கருவி பயிலுவோர், பல வகை வாத்தியங்கள் இசைப்போர், விதுாடகர் முதலியோர் தனித்தனியாக வாழும் குடியிருப்பு களும் வீதிகளும், குதிரை செலுத்துவோர், யானைப்பாகர், தேர்ப்பாகர், காலாட்படையினர் ஆகியோர் மன்னனின் அரண்மனையைச் சூழ்ந்து இருக்குமாறு உள்ள இருப்பிடங்கள் முதலியவை நிறைந்த பெருமைக்குரிய பாடல் சிறப்புமிக்க பட்டினப்பாக்கமாகும் என இளங்கோவடிகள் சிறப்பித்துக் கூறுகிறார்.

" கோவியல் வீதியும், கொடித்தேர் வீதியும்

பீடிகைத் தெருவும் பெருங்குடி வணிகர் மாட மறுகும், மறையோர் இருக்கையும் வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் சூதர், மாகதர், வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர், காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்