பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 57

" காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு

மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாகென"

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள். இங்கு "மொழிப்பொருள் தெய்வம்" என்பது "அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள்' ஆகியோரை ம -ணர்த்தும் ஐந்தெழுத்து வணக்கமாகும். இவ்வாறான அம்பெரும் பரமேஷ்டிகளே வழித்துணையாக அமைக எனத் துதித்துப் புறப்பட்டனர் என்று பொருளாகிறது. இது சமன . மயப் பண்பாட்டின் பகுதியாகும்.

கோவலனும் கண்ணகியும் புகார் நகரிலிருந்து |றப்பட்டுக் கவுந்தியடிகளுடன் காவிரியின் வடகரை வழியாகப் பயனம் செய்தபோது, வழிநெடுகிலும் கழனிகளில் நாற்று நடும் பெண்களின் பாட்டொலியும், பொன்னேர் பூட்டி- நிற்கும் ஏர் மங்கலப் பாட்டொலியும், களங்களில் நெல்லைத் துாற்றும்போது பாடும் முகவைப் பட்டொலியும் கேட்டுக்கொண்டே உழவர் வாழும் பளர்களையும், வேத மந்திர ஒலிகள் கேட்கும் அந்தனர் வாழும் ஊர்களையும் கடந்து மூவரும் நடந்து சென்றனர் என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. உழவர்களின் ட் டொலிகளையும் அந்தணர்களின் வேதமந்திர ஒலிகளையும் இளங்கோவடிகள் சிறப்பித்துக் கூறுவதை இங்கு காண்கிறோம்.

மதுரையில் வைகை ஆற்றைக் கடப்பதற்குக் குதிரை முக ஒ ம், யானை முக ஒடம், சிங்க முக ஒடம் முதலிய பல வகை ஒடங்களில் ஆற்றைக் கடந்து அக்கரை செல்வதற்கு வறிப் பலரும் செல்லும் பல பெரிய துறைகள் இருந்தன எனவும் அத்துடன் சிறிய மரப்புனைகளும் ஆற்றைக் கடக்க ம தவியாக இருந்தன என்றும் காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. இந்தச் செய்திகள் மூலம் ஆற்றைக் க. ப் தற்கு அக்காலத்திய போக்குவரத்து வளர்ச்சி நிலையை அறிய முடிகிறது.

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் அத்தகைய பெரிய ஒடங்களில் செல்லாமல் தனியாக ஒரு மரப்புனையில் எறி வைகையைக் கடந்து அதன் தென்கரைக்குச் சென்றதாக,