பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சிறந்த பக்தி நூல்களாக, தலைசிறந்த தமிழ் இலக்கியங்களாக, வேத சாத்திரங்களாகத் திகழ்கின்றன. திவ்யப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் பாரதம் முழுவதிலும் உள்ள வைணவ திவ்ய தேசங்களைப் பற்றியும், அவைகளில் எழுந்தருளியுள்ள பெருமாளின் பெருமைகளைப் பற்றியும் திவ்யமாகப் பாடியுள்ளார்கள். இராமபிரானையும் கண்ணபிரானையும்பற்றி மிக அதிகமாகப் பாடியுள்ளார்கள். திவ்யப் பிரபந்தம் குறிப்பிடும் திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் என்றும், சோழ நாட்டுத் திருப்பதிகள் என்றும், மலைநாட்டுத் திருப்பதிகள் என்றும், தொண்டை நாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள் என்றும் தொகுத்துக் கூறப்படுகின்றன.

இமயத்திலுள்ள வதரியிலிருந்து (பத்ரி நாராயனப் பெருமாள்) திருவனந்தபுரம் (அனந்த சயனப்பெருமாள் - பத்மநாபப் பெருமாள்) வரையிலான பாரத நாடு முழுவதிலு முள்ள சிறப்புமிக்க வைணவத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாளின் புகழைப் பரப்பியுள்ளார்கள். இமயத்தையும் பொதிகையையும் இணைத்துள்ளார்கள். கங்கையையும் காவிரியையும் பொருனையையும் இணைத்துள்ளார்கள். இமயம் முதல் குமரிவரையிலும் படர்ந்துள்ள பாரதப் பண்பாட்டை நன்னெறிகளை இணைத்துள்ளார்கள். ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடியுள்ள திவ்ய தேசங்கள் அனைத்தும் வரலாற்று ச் சிறப்புமிக்கவைகளாகும்.

சிலப்பதிகாரக் காப்பியம் தமிழகத்தின் மூன்று தமிழ் மன்னர்களின் அரசியலையும் ஆட்சிமுறைகளையும், மூன்று தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஆதாரமாய்க் கொண்டு அமைந்துள்ள சிறந்த பெருங்காப்பியமாகும்.

திவ்யப் பிரபந்தம் திருமாலின் அவதாரப் பெருமைகளை விளக்கும் வியாச பகவான் அருளிய பூரீ பாகவதத்தையும் மற்றும் வேதங்களையும் உபநிடத தத்துவங்களையும் இதிகாசங்களை யும் புராணங்களையும், மனித வாழ்க்கை அனுபவங்களையும் ஆதாரமாய்க்கொண்டு இனிய தமிழ்ப் பாசுரங்களில் கூறும் சிறப்புமிக்க எழுச்சிமிக்க பக்திப் பேரிலக்கியமாகும்.

திவ்யப்பிரபந்தம் கூறும் இப்பக்திப் பாசுரங்கள், வேதாந்த தத்துவ ஞானக் கருத்துகளையும் வைதிக நெறிகளையும் இயற்கையுடனும் மக்களின் வாழ்க்கையுடனும் இணைத்துத் திவ்யமான தமிழில் பாடப்பட்டுள்ளன.

இந்த இருபெரும் தமிழ்ப் பேரிலக்கியங்களும் இவைகளின் ஆசிரியர்களும் தங்கள் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், தமிழகத்தின்