பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 59

சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனச் சாதி பிரித்துச் சிறந்து விளங்கும் இயல்பு கொண்ட, பொன்னின் வகைகளைத் தெளிவாகப் பிரித்து அறியும் ஆற்றல் கொண்ட பொ ன் வணிகர் நிறைந்த பொன் கடை வீதிகளும் நிறைந்திருந்தன.

" சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூ நதம்என ஓங்கிய கொள்கையின் பொலம்தெரி மாக்கள் கலங்களுர் ஒழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்" என்றெல்லாம் காப்பிய அடிகள் குறிப்பிட்டுக் கூறு ன்ெறன.

இன்னும் பல வகையான பட்டு, உரோமம், பஞ்சு மால்களால் ஆன ஏராளமான துணிமணிகள் நிறைந்த துணிக்கடை வீதிகளும், பல வகைத் தானியங்களும் பயறு வகைகளும், வாசனைப் பொருள்களும் ஆன கூலங்கள் கூடை "...டையாய்க் குவித்து விற்பனையாகும் கூலவணிக விதிகளும், மற்றும் அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் முதலிய பல வேறு வகை மக்கள் வாழும் வீதிகளும் நிறைந்திருந்தன என்று காப்பியம் மிக விரிவாக எடுத்துக் கூறுவது சிறப்பாகும்.

" நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னுாறு அடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை விதியும் நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்

அம்பன வளவையர் எங்கனும் திரிதரக் கால மன்றியும் கருங்கறி மூடையொடு கூலம் குவித்த கூல வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்" என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

" நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி

கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்ர்ேக் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு அறியா பண்புமேம் பட்ட மதுரை மூதுார் மாநகர்”