பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்று மதுரை மாநகரின் சிறப்புகளைப் பற்றி இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார்.

அடைக்கலக் காதையில் மாடல மறையோன் மதுரைப் புறநகரில் இருந்த அறப்பள்ளியில் கோவலனைச் சந்தித்தபோது அக்கோவலனுடைய பெருமைகள் பலவற்றையும் பேசி, அரசர்களுக்கு அடுத்த நிலையில் மதிக்கத் தக்க வணிகர் என்னும் கருத்தை “அரைசர் பின்னோர்” எனக் கூறுகிறார். இக்கருத்துகள், காப்பிய காலத்தில் சமுதாயத்தில் அரசர்களுக்கடுத்த நிலையில் வணிகர்கள் தகுதியும் புகழும் பெற்றிருந்தனர் என்பதை மேலும் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.

ஆயர் குல மக்களைப்பற்றி இக்காதையில் ஒரு செய்தி வருகிறது.

" ஆகாத்து ஒம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடு இல்லை” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

ஆநிரை காத்து, அவற்றைப் பராமரித்து, அவைகளால் பெறும் பலன்களான பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், சானம், ரோமம், தோல் முதலியவைகளை மக்களுடைய நலனுக்காக அளிக்கும் ஆயர்குல மக்களின் சிறப்புச் சேவை பெருமைக்குரியது என்பது காப்பியம் தெரிவிக்கும் சிறந்த செய்தியாகும்.

மதுரைநகரின் கோட்டைச்சுவரின் சிறப்பான பாதுகாப்புப் பற்றியும், நுட்பமான தற்காப்பு நிலை ஏற்பாடுகள்பற்றியும் மிக விரிவாக இளங்கோவடிகள் எடுத்துக் கூறுகிறார்கள்.

"காவற்காடும் அகழியும், தானே வளைந்து அம்பெய்யும் விற்பொறியும், கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும், கல்லை உமிழ்கின்ற கவண்களும், காய்ந்து சூட்டுடன் சேர்ந்தார்மேல் இறைத்தலால் வருத்துகின்ற நெய்யையுடைய மிடாவும், செம்பு உலோகத்தை உருக்கிப் பகைவர்மேல் இறைக்கும் மிடாவும், இரும்பை உருகக் காய்ச்சி வீசும் உலைப்பொறியும்,