பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாள்கொடி நுடங்கும்

வாயில்"

என்பன இளங்கோவடிகள் மிக அற்புதமாக விளக்கிக் கூறும் சிறந்த காப்பிய அடிகளாகும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் தற்காப்பிற்கும் கோட்டையும் அகழியும் கொண்ட அரண் மிகவும் அவசியமானதாகும். சமுதாயத்தில் அரசுகள் தோன்றி வலுவடைந்தபோது அவற்றின் தலைநகரங்களுக்கு அரண் அமைக்கப்படுவது என்பது பாதுகாப்பின் பகுதியாக இருந்துள்ளது.

“ படைகுடி, கூழ்,அமைச்சு, நட்பு:அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு” ன்ன்று வள்ளுவப்பெருமான் குறிப்பிட்டுள்ள அரசுக்குரிய சிறப்புகளுள் அரனும் ஒன்றாகும். அரண் என்பது பாதுகாப்பிற்கும் தற்காப்பிற்கும் அவசியமாகிறது. இன்னும் அரனைப்பற்றி ஒரு தனி அதிகாரமே வள்ளுவர் எழுதி யுள்ளது மேலும் அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவ தாகிறது.

உயரமும் அகலமும் உறுதியும் பகைவரால் அழிக்க முடியாத அருமை இந்நான்கையும் மிகுதியாக ஒர் அரண் என்பது கொண்டிருக்க வேண்டும் என்று வள்ளுவனார் அரணுக்கு நான்கு சிறப்புகளைக் கூறுகிறார்.

" உயர்வுஅகலம் திண்மை அருமை.இந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்” என்று நூலோர் கூறுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

மதுரையின் மதில் அரணின் சிறப்புகளை மிக விரிவாக இளங்கோவடிகள் எடுத்துக் கூறுகிறார். ஒரு வலுவான அரண் என்பது ஒரு வலுவான அரசுக்கு அவசியமானதாகும். உயர்வு, அகலம், திண்மை, அருமையுடன் மிகவும் சிறப்பான தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களையும், போர்க் கருவிகளையும் கொண்டிருந்தது மதுரையின் பாதுகாப்பு