பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இழிவான களவுத்தொழில் செய்யும் மக்களுடைய இயல்பையும், திறனையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள். சமுதாயத்தில் அக்காலத்திலும் களவு, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, அபகரித்தல், வஞ்சகச் செயல்கள் இருந்தன. காதல், கவறாடல், கள்ளுண்ணல், பொய்மொழிதல், ஈதல் மறுத்தல் முதலியவை பஞ்சமா பாதகங்கள் எனக் கருதப்பட்டிருக்கின்றன. எல்லாக் காலங் களிலும் களவு தொடர்பான குற்றங்கள் செய்பவர்களும் அவர்களிடமிருந்து மக்களைக் காப்பதற்கான காவலர் கடமைகளைப்பற்றியெல்லாம் பல வேறு சாத்திரங்களும், இலக்கியங்களும் சட்டங்களும் தண்டனை முறைகளும் நீதி நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

வஞ்சகப் பொற்கொல்லன், அரசனிடம் பொய் கூறி, கோள்மூட்டி, காவலரை அழைத்து வந்து கோவலனைக் காட்ட, "பார்வையில் கள்வன் போலக் காணப்படவில்லை” என்று காவலர்கள் கணித்த போது, அக்காவலர்களிடம் வஞ்சிப்பத்தன் கள்வர்களின் இலக்கணங்களைப்பற்றிக் கூறுவதாக உள்ள காப்பிய அடிகள்

" மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்

தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுடன் அன்றே இழுக்குடை மரபில்”

என்று எட்டு வகையான படைத்துனைகளைக் கள்வர்கள் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

இங்கு கள்வர்களின் இயல்பு, திறமை, ஆற்றல், மந்திரம், தந்திரம், இடம், காலம், கருவி முதலியவைபற்றி மிக விரிவாகச் சில கதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது. அதிலும் வஞ்சகக் கள்வனான வஞ்சிப்பத்தன் வாயிலாக அவைகளைப்பற்றி எடுத்துக் கூறுவது சிறந்த காப்பிய உத்தியாகும்.

ஆயர்பாடியில் கோவலனும் கண்ணகியும் தங்கியிருந்த போது ஒர் அருமையான காட்சியை இளங்கோவடிகள் காட்டுகிறார். கண்ணகி, புதுப்பானைகளில் சமையல் செய்து உணவு தயாரிக்கிறாள். கோவலன் சாப்பிடச் செல்லுமுன்