பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

குறிப்பிடுகிறார். மலைவாழ் மக்கள் எழுப்பும் ஆடல், பாடல், செயற்கை மற்றும் இயற்கை ஒசைகளைப்பற்றிக் கூறுகிறார்.

" குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்

வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும் நறவுக்கண் உடைத்த குறவர் ஒதையும் கலிகெழு மீமிசைச் சேணோன் ஒதையும் பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும் இயங்குபடை அரவமோடு யாங்கனும் ஒலிப்ப" என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள், ஆடல் பாடல், வேலன் வழிபாடு, தினைப்புனங்களின் சிறப்பு முதலியவை பற்றிய விவரங்கள் இங்கு வெளிப்படுகின்றன.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க, இமயத்தில் கல்லெடுக்கத் தனது படையுடன் வடக்கே செல்லக் காலத்தைக் கணிக்கும்படி நிமித்திகனிடம் கேட்கிறான். காலக்கணிதர் எழுந்து, உரிய காலத்தைக் கணித்து மன்னனிடம் எடுத்துக் கூறுகிறார்.

" ஆறிரு மதியினும் காருக வடிப்பயின்று

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம் இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யாகென்று ஏத்த"

என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

ஒர் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் கோள்கள் நிற்கும் நிலையை அறிந்து ஆராய்ந்து நன்கு பயின்று கணித நூலுக்குரிய ஐந்து உறுப்புகளின் (பஞ்சாங்கம்) இலக்கணங் களையும் வல்லவர் வாய்வழியாகக் கேட்டு முடித்த பெருங்கனிதன் தானே எழுந்து நின்று கூறினான் என்பது பொருளாகிறது. ஆறிரு மதி என்பது பன்னிரண்டு மாதங்களாகும். காருக அடி என்பது சூரிய சந்திரர்கள் இதர கிரகங்கள், நட்சத்திரங்களின் நிலை என்பதாகும். இந்தக்