பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அகண்ட பாரதத்தின் இயற்கை வளத்தையும் அதன் அற்புதமான மலைகளையும், பொங்கிவரும் ஆறுகளையும், கடல்களையும், வற்றாத நீர்நிலைகளையும், தெய்விக விருட்சங்களையும் இதர எண்ணற்ற வகையிலான தாவரங்களையும் விலங்குகளையும், இதர ஜீவராசிகளையும் (உயிர்க்கூறுகளையும்) அதன் வளத்தைப் பற்றியும், மனித முயற்சிகள் பற்றியும் தொழில் பெருக்கம் பற்றியும், செயற்கை வளங்கள்பற்றியும் வாழ்க்கை மேம்பாடுகள் பற்றியும் விவரித்துக் கூறுகின்றன.

திவ்யப் பிரபந்தம் கூறும் பக்தியும் பிரபத்தி தத்துவங் களும் வாழ்க்கையோடு இணைந்தவைகளாகும். இருபேரிலக் கியங்களும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளைப்பற்றியும் சீலங்களைப்பற்றியும் விவரித்து எடுத்துக்காட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகளை எடுத்துக்கூறுகின்றன. அவை தனி மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.

சிலப்பதிகாரக் காப்பியமும் திவ்யப் பிரபந்தமும் திருமாலைப்பற்றியும் திருமால் பெருமைகளைப்பற்றியும் பாடுகின்றன. திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் தமிழகத்திலும், பாரத கண்டம் முழுவதிலும் மக்களுடைய வாழ்க்கையோடு இணைந்து முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. சிலப்பதிகாரக் காப்பியம், தமிழகத்தில் உள்ள திருமால் வழிபாடுபற்றியும் திருமால் கோயில்கள்பற்றியும் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. திவ்யப் பிரபந்தம் திருமாலையும் திருமால் வழிபாடுகள்பற்றியும், திருவிழாக்கள்பற்றியும், திவ்ய தேசங்கள்பற்றியும் அவைகளின் தனிச் சிறப்புகள்பற்றியும், அங்கு நடைபெறும் திருவிழாக்கள் தேரோட்டங்கள் பற்றியும், அவ்விழாக்களில் மக்கள் திரளாகக் கூடுவதைப்பற்றியும் மிக விரிவாக விவரித்துக் கூறுகின்றது.

சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் இனிய நல்ல தமிழ் நூல்களாகும்; அவ்வினிய தமிழின் மூலநூல்களாகும். தமிழைப் பற்றியும், தமிழின் இனிமையைப்பற்றியும் தமிழ்மொழியின் வளத்தைப் பற்றியும் விவரித்துக் கூறும் இனிமையான கவிதைகளும் காவியங்களுமாகும். இருபேரிலக்கியங்களும் தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழகத்தின் சிறப்புகள், தமிழகத்தின் நாடு நகரங்கள், மலைகள், ஆறுகள், வளமான பூமி, மனிதவளம், மனித முயற்சிகள், அதன் செல்வ வளம், தொழில் வளம், வாணிபம், உற்பத்திப் பண்டங்களின் பெருக்கம், தமிழ் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை, வளர்ச்சியடைந்த நாகரிகம் ஆகியவைபற்றியெல்லாம் விரிவாகப் பேசுகின்றன.