பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 73

ஆயர்பாடிப் பெண்கள் தயிர் கடையும்போது தங்கள் கைகளில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் கலகலவென ஒசை ஏற்படும்படியாக இருந்ததைக் குறிப்பிட்டு, m " காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையே” என்று பட்டர்பிரான் கோதை பாடுகிறார்.

நல்ல காய்ப்பருவத்திலுள்ள நெல்லை எடுத்து, அதை அரிசியாக்கி, அதனுடன் கரும்புச்சாற்றினைக் கலந்து, அத்துடன் கட்டியாக உள்ள அரிசியை அவலாக்கி அதனையும் கலந்தால் மிக்க ருசியுள்ள ஒரு பண்டமாகிறது. அத்தகைய படையலைப் படைத்து மறையவர்களுடைய மந்திரத்தால் உன்னை வணங்குகிறேன் என்று கண்ணனை நோக்கிக் கோதை நாச்சியார்

" காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்

கட்டி யரிசி அவலமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மத னேஉன்னை வணங்குகின்றேன்" என்று திருமொழிப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார். திருமங்கையாழ்வார்

வைணவத் திருத்தலங்களுள் பிரசித்தி பெற்ற ஒன்று திருவல்லிக்கேணியாகும். இன்று அந்தத் திருவல்லிக்கேணி, தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னையின் ஒரு பகுதியாக உள்ளது. சென்னைக்குச் சிறப்பளிப்பது திருவல்லிக்கேணி, திருமயிலை (மயிலாப்பூர்) ஆகியனவாகும். திருவல்லிக்கேணி பொழில்களும் வாவிகளும் உயர்ந்த மதிள்களும், மாட மாளிகைகளும் நிறைந்த நகரமாக விளங்கியது. தொண்டை மண்டலத்தில் உள்ள இந்த திவ்ய தேசத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது திருமங்கையாழ்வார்,

" மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்

மாடமா ளரிகையும்மண் டபமும் தென்னைதொண் டையர்கோன் செய்தநன் மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை' . .ன்று சிறப்பாகப் பாடுகிறார்.