பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

காஞ்சி மாநகரம், பாரதத்தின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றாகும். பாடலிபுத்திரம், நாளாந்தா, உஜ்ஜைனி, தட்ச சீலம், மதுரை ஆகியவைகளுடன் காஞ்சி மாநகரம் புகழ் பெற்ற பழம் பெரும் நகரமாகும். காஞ்சியில் சைவமும் வைணவமும், புத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருக் கின்றன. கலைகளும் வேதங்களும் நீதிநூல்களும் அவைகளின் விளக்க நூல்களும் பொருள் நூல்களும் அவை படித்து விளக்கும் சான்றோர்களும் நிறைந்த நகரமாக விளங்கியது. அத்தகைய புகழ்பெற்ற காஞ்சி மாநகரின் ஒரு பகுதி அட்டபுயகரம். காஞ்சியிலும் அதைச் சுற்றிலும் உள்ள பன்னிரண்டு திவ்ய தேசங்கள் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டவை. அத்துடன் காஞ்சிக்கு அருகில் சற்றுத் துரத்தில் உள்ள முக்கியமான பல பெரிய பெருமாள் கோயில்களும் பாடல் பெற்ற பிரபலமான கோயில்களாகும்.

இத்தனை பிரபலமான, புகழ் பெற்ற காஞ்சி மாநகரத்தின், சிறப்புகள்பற்றித் திருமங்கையாழ்வார் மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்.

" கலைகளும் வேதமும் நீதிநூலும்

கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்

நீர்மையி னால்அருள் செய்துநீண்ட மலைகளும் மாமணி ,பும்மலர்மேல்

மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் ஆர்கொல்என்ன

அட்ட புயகரத் தேன்என்றாரே”

என்று அட்டபுயகரத்தானை நினைந்து பாடுகிறார்.

நமது பாரத பூமியின் சாத்திரங்களிலும் இலக்கியங் களிலும் ஏழு இசைகள், ஆறு அங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு மறைகள், முத்தி, இரு பிறவி, ஒரு குறிக்கோள்பற்றிய பல குறிப்புகளும் விளக்கங்களும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நமது நாட்டு மக்களின் அறிவுத்துறை வளர்ச்சியின் உச்சங்களாகும்.

பெரிய திருமொழியில் திருக்கோவிலுார்பற்றிய பாடலில் திருமங்கையாழ்வார் மிகவும் சிறப்பாக,