பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்

ஐவேள்வி, ஆறங்கர், ஏழினிசையோர் மறையோர் வணங்கப் புகழ்எய்தும் நாங்கூர்” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

மறையவர்கள் (வேதியர்கள் - அந்தணர்கள்) முத்தி, நான்கு வேதம், ஐந்து வேள்வி, ஆறு அங்கம், ஏழின் இசை ஆகியவற்றை முறையாக முழுமையாக வளர்க்க வேண்டும் என்பது நமது பாரத புண்ணிய பூமியின் சீரிய பண்பாட்டு நெறிமுறையாகும். இந்நெறிமுறைகள்பற்றி ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களிலும் வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கடமைகளைப் பற்றி இளங்கோவடிகளாரும் வலியுறுத்திக் காட்டுவதை ஏற்கனவே கண்டோம். சேரநாட்டின் சிறப்பைக் கேள்வியுற்று அங்குச் சென்ற பராசரன் என்னும் மறையோன் அங்கிருந்த அந்தணர்கள் தம்மின் சீரான நெறிமுறைகளில் குறைகள் கண்டு அவர்களிடம் வாதாடி பார்ப்பன வாகை சூடி அவர்களைத் திருத்தினான் என்னும் கருத்துப்படக் காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

அவ்வாறு பராசரன் சேர நாட்டில், "பார்ப்பன வாகை சூடி ஏற்புற

நன்கலம் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் தங்கால் என்பது ஊரே" என்று காப்பியத்தின் செய்யுள் அடிகள் குறிப்பிடுகின்றன.

பராசரன் சேர நாட்டில் பரிசில்களைப் பெற்றுத் தமது ஊருக்குத் திரும்பும்போது செங்கோன்மை மிக்க பாண்டிய நாட்டில் திருந்திய முறையில் (சீரான முறையில்) தொழில் செய்துகொண்டிருந்த மறையவர்கள் வாழும் திருத்தங்கல் என்னும் ஊருக்கு வந்தார் என்றும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிராமணச் சிறுவர்களுள் ஒருவன், பராசரனுக்கு இணையாக வேதங்களை ஒதினான் என்றும், அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பராசரன், தான் சேரனிடம் பெற்று வந்த பரிசில் பொருள்களை அப்பிராமணச்