பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ

திவ்யப் பிரபந்தம் வைணவ பக்தி இயக்கத்தின் அடிப்படையான இலக்கியமாகும். சிலப்பதிகாரக் காப்பியம், அடிப்படையில் சமண பெளத்த சார்பு இலக்கியமாகும். இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் வடக்கிலும் தெற்கிலும் பக்தி இயக்கம் ஒரு வலுவான இயக்கமாக மக்களுக்கிடையில் தோன்றி இடம் பெற்றதை அறிகிறோம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பக்தி இயக்கம் தமிழகத்தில் மிகவும் பலமாக வேரூன்றிப் பரவியிருந்தது. இந்தப் பக்திப்பேரியக்கத்தின் ஆதாரக் கருத்துகளின் சித்தாந்த அடிப் படையாகத் தி வியப் பிரபந்தங்களும் சைவத் திருமுறைகளும், தமிழகத்தில் வலுவாக வேர்விட்டுப் பரவியுள்ளன.

பக்திப் பேரியக்கம் ஒரு வலுவான திரளான மக்களியக்க மாகத் தமிழகத்தில் பொங்கி எழுந்திருக்கிறது. இன்றும் நமது நாட்டில் திருவிழாக்களிலும் திருக்கோயில்களிலும் பல்லாயிரக் கணக்கான, பல இலட்சக்கனக்கான மக்கள் திரள்வதைக் காண்கிறோம்.

இந்தப் பக்திப் பேரியக்கத்தின் அடிப்படை அமைப்பு களாக நமது சமயங்களும், மடங்களும், தர்ம ஸ்தாபனங்களும் அமைந்துள்ளன. அவைகளின் தளங்களாக நமது ஆலயங்களும் கோவில் நகரங்களும் அமைந்துள்ளன. அந்தப் பக்திப் பேரியக்கத்தின் சித்தாந்தமாக, தத்துவ ஞானமாக, அறிவொளி யாக, ஆசார நெறிகளாக, மக்களுக்கு வழிகாட்டும் சீலங்களாக இனிய இசையில் திவ்யப் பிரபந்தமும் திருமுறைகளும் அமைந்துள்ளன. இந்தப் பக்தி பேரியக்கத்தின் வெளிப்பாடாகத் திரளான மக்கள் பங்கு கொள்ளும் திருவிழாக்களும் தேரோட்டங்களும் தீர்த்தாடனங்களும் அமைந்துள்ளன.

திவ்யப் பிரபந்தத்தின் அத்தகைய சிறப்புகளை இந்த நூலில் எடுத்துக்காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணி மிகப்பெரியதும் மிகக் கடினமானதுமாகும். ஆயினும், இந்த மகத்தான பெரும்பனியில் ஒரு சிறு துளியாக இந்த நூலைத் தமிழ் மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

நமது இனிய தமிழ் நூல்கள், அவைகளின் ஆழ்ந்த கருத்துகள் தமிழ் மக்களிடம் இன்னும் விரிவாகச் செல்ல வேண்டும். பாரத நாட்டில் இதர பகுதிகளிலும் அவை விரிவாகப் பரவவேண்டும். இந்த மகத்தான மக்கள் பணியில் - மகேசன் பணியில் ஒரு சிறு தொண்டாக - தொண்டரடிப்பொடியாக இந்த ச் சிறு மலரைத் தமிழ்த் தாயின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். -

இந்த நூலில் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சற்று அதிகமாகவும் முழுமையாகவும் எடுத்துக்காட்டுகளுக்காகக்