பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 79

இன்னும் கடல்மல்லைத் தலைவனைப்பற்றி, வேதங்கள் நான்கையும் வேள்விகள் ஐந்தையும் அங்கங்கள் ஆறும் கண்டவன் என்றும், கடல்மல்லையின் செழிப்பைப்பற்றிக் கறும்போது, “செழுநீர் மலர்க்கமலம் திரையுந்து வன்பகட்டால் உழுநீர் வயலுழவர் உழப்பின் முன் பிழைத்தெழுந்த கழுநீர் கடிகமழும் கடல்மல்லை” என்றும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

இன்னும் திருக்கச்சி (காஞ்சி)யின் மணிமாடங்களின் றெப்புகள்பற்றியும், திருக்கோவிலுரரின் வளத்தைப்பற்றியும், துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணையாற்றின் செழுமையைப்பற்றியும், படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திரக்கூடம்பற்றியும் மற்றும் பொது வாழ்வின் பொது நெறியைப்பற்றியும் பக்தி நெறியைப்பற்றியும் ஆழ்வார் றெப்பாகக் குறிப்பிடுகிறார்.

மக்களின் பெருமுயற்சியினால் தில்லை நகர் பெரும் பிறப்புகளைப் பெற்றிருக்கிறது; உலகளாவிய புகழைப் பெற்றிருக்கிறது. அதுபற்றியெல்லாம் ஆழ்வார்கள் மிகவும் அற்புதமாகப் பாடுகிறார்கள்.

சீராம விண்ணகரம் என்னும் சீர்காழி நகரின் கீர்த்தி, அதன் நெய்தல் நிலச் சிறப்புகள் ஆகியவற்றை இணைத்து அங்கு அருமறையோர் செம்மை ஒதும் வேதங்கள், நடத்தும் வேள்விகள் மற்றும் அங்கங்கள் இவைபற்றியெல்லாம் ஆழ்வார் மீண்டும் சிறப்புற எடுத்துக் கூறுவதைக் ப. .ண் கிறோ ւՃ. --

திருவாலியைப்பற்றிப் பாடும்போது சந்தி, வேள்வி, அ | ங்கு, நான்மறை ஒதி, ஒதுவித்து ஆதியாய் வரும் அந்தணாளர் அறா அணி ஆலியம்மானே’ என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

திருநாங்கூர் வட்டாரத்தின் சிறப்புகள், செழிப்பு, மக்களுடைய நல்வாழ்வுபற்றியும் மறையோர்களின் தனிச் பிறப்புகள்பற்றியும், திருமங்கையாழ்வார் மிக விரிவாகப் டுகிறார். அங்கு வாழும் மறையோர்களைப்பற்றிச்