பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன

அரைச பூதத் தருந்திறல் கடவுளும்" என்று மதுரைக் காண்டம் அழற்படுகாதையில் இளங்கோவடிகள் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

சிரிவரமங்கையின் சிறப்புகளைப்பற்றிக் கூறும் போது நம்மாழ்வார், சேற்றுத் தாமரை, செந்நெல், திங்கள்சேர் மணி மாடம், நான்மறைவல்லவர், தேறுஞானத்தர், வேத வேள்வியர், செந்தொழிலவர், சேறுகொள் கரும்பும் பெருஞ்செல்வமும் மலிந்த தண்சிரீவர மங்கை நகர் என்றெல்லாம் மனித முயற்சிகள் மூலம் சீரும் சிறப்பும் பெற்றுள்ள நகரக் காட்சியைக் காண்கிறோம்.

இன்னும் திருக்குடந்தை, திருவல்லவாழ், திருச் செங்குன்றுார் முதலிய கோயில் கொண்ட நகரங்களையும் சிறப்பித்துக் கூறுகிறார். குட்ட நாட்டுத் திருப்புலியூரின் செல்வ வளத்தையும் மக்களின் சிறப்புமிக்க வாழ்வினையும் பற்றி விரித்துக் கூறுகிறார். அதன் ஊர்வளத்தையும் ஏர் வளத்தையும் நீர்வளத்தையும் விளைபொருள்வளத்தையும் விரிவுபடக் கூறுகிறார்.

திருக்கண்ணபுரத்தைப்பற்றிப் பாடும் போது, உயர்ந்த வேலைப்பாடுகளைக்கொண்ட கற்களாலும், மணிகளாலும் பொன்னாலும் வேய்ந்த மதில்களைக் கொண்டதாக அக் கோயிலைப்பற்றிப் பாடுகிறார். நள்ளி சேரும் வயல்கள், வண்டு பாடும் பொழில்கள், வேலை மோதும் மதிள், வானை உந்தும் மதிள், அரண் அமைந்த மதிள், நன்பொன் ஏய்ந்த மதிள், மணிபொன் ஏய்ந்த மதிள், கல்லின் ஏய்ந்த மதிள் என்றெல்லாம் ஊரின் சிறப்பையும் கோயிலின் சிறப்பையும் விவரித்துக் கூறுகிறார். அம்மதிள்களின் காட்சியில் மனிதனின் அறிவாற்றலும் முயற்சிகளும் செயல்திறனும் நிறைந்திருக்கின்றன.

திருப்பேர் நகரத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, கொடிக் கோபுர மாடங்கள், கிளி தாவிய சோலைகள், வண்டு களிக்கும் பொழில்கள், வண்ண நன்மணி மாடங்கள்,